எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு 2003ஐ இன்னும் பயன்படுத்துகிறீர்களா! அதன் வேர்ட் தொகுப்பில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை உருவாக்கு கையில், அதில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிய வேண்டி Word Count என்னும் வசதியைப் பயன்படுத்தலாம். எந்த ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்தாலும் அதில் Word Count என்ற வசதி கிடைக்கும். ஒரு முறை கூட்டிப் பார்த்து விடை கிடைத்த பின்னர் மீண்டும் கூட்டிப் பார்க்க வேண்டும்
என விரும்பினால் Recount என்ற பட்டன் கிடைக்கும்.
டெக்ஸ்ட் எதனையும் தனியாக செலக்ட் செய்யாத பட்சத்தில் முழு டெக்ஸ்ட்டின் சொற்களும் மீண்டும் எண்ணப்பட்டு விடை கிடைக்கும். உங்களுக்கு எத்தனை சொற்கள் என்று சொல்கின்ற சிறிய விண்டோவில் உள்ள சிறிய தலை கீழ் அம்புக் குறியினைக் கிளிக் செய்தால் மேலும் 5 விதமான விடைகள் இருக்கும். இடைவெளி இல்லாமல் எத்தனை கேரக்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, இடைவெளியுடன் உள்ள கேரக்டர்களின் எண்ணிக்கை என்ன, எத்தனை வரிகள், மற்றும் எத்தனை பக்கங்கள் என்ற விவரங்கள் காட்டப் படும். இது ஒரு புளோட்டிங் டூல் பாராக இருக்கும். இதனை மானிட்டரில் எந்த பகுதியில் வேண்டுமென்றாலும் இழுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த வசதியினை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த டூல் பாரினை இழுத்துச் சென்று மேலே உள்ள டூல்பாருடன் இணைத்துவிட்டால் அது அங்கேயே தங்கிவிடும்.
வேர்ட் 2007 பயன்படுத்தினால், எந்த டூலையும் நீங்கள் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை. டாகுமெண்ட்டின் கீழாக உள்ள அதன் ஸ்டேட்டஸ் பாரில், டாகுமெண்ட்டில் எத்தனை சொற்கள் உள்ளன என்பது எப்போதும் காட்டப் பட்டுக் கொண்டே இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, அவை மொத்தம் எத்தனை என்று அறிய விரும்பினால், அங்கேயே அதுவும் காட்டப்படும். டாகுமெண்ட்டில் உள்ள மொத்த சொற்களில், எத்தனை சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று காட்டப்படும்.
பாரா வடிவமைப்பை மற்றவற்றிற்கு அமைக்க: வேர்ட் தொகுப்பில் கூடுதல் பயன்களைத் தரும் ஒரு சாதனம் பார்மட் பெயிண்டர் என்னும் வசதி ஆகும். இதன் மூலம் ஒரு பாரா பார்மட்டினை இன்னொரு பாராவிற்கு மாற்றலாம். முதலில் எந்த பாராவின் பார்மட்டினைக் காப்பி செய்து இன்னொரு பாராவிற்கு மாற்ற விரும்புகிறீர்களோ அதனை செலக்ட் செய்திடவும். பின் டூல் பாரில் பார்மட் பெயிண்டர் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின் எந்த பாராவில் இந்த பார்மட்டினைச் செலுத்த வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இதே பார்மட்டைத் தொடர்ந்து காப்பி செய்திட பார்மட் பெயிண்டரில் டபுள் கிளிக் செய்திட வேண்டும். மீண்டும் பார்மட் பெயிண்டரை குளோஸ் செய்திடும் வரை இந்த பார்மட் தொடர்ந்து காப்பி ஆகும். குளோஸ் செய்திட பார்மட் பெயிண்டரில் இன்னொரு முறை கிளிக் செய்திட வேண்டும். அல்லது எஸ்கேப் கீயினை அழுத்த வேண்டும்.
வேர்ட் 2007 தொகுப்பில், பார்மட் பெயிண்டர் பெற, ஹோம் டேப்பில், கிளிப் போர்ட் பிரிவில், வலது மூலையில் இருக்கும் பார்மட் பெயிண்டர் சென்று, மேலே காட்டப்பட்டுள்ள மாற்றங்களைச் செயல்படுத்தலாம்.
இந்த ஐகான், பெயிண்ட் பிரஷ் ஐகானாகக் கிடைக்கும்.
மெனுவிலிருந்து வெளியே வர: வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்து விட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
2. மெனுமீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.
3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.