கோலிவுட் கோதாவில் சிஞ்சு மோகன்

டைரக்டர் கே.பாக்யராஜ், பொன்வண்ணன், சாட்டை யுவன், சாரா ஷெட்டி, சிஞ்சுமோகன் உள்பட பலர் நடித்து வரும் படம் அய்யனார் வீதி. ஜிப்ஸி
ராஜ்குமார் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஓப்பனிங் பாடலை ராஜபாளையத்திலுள்ள சொக்கலிங்கபுரத்தில் அய்யனார் செட் போட்டு பிரமாண்டமாக படமாக்கியிருப்ப தாக சொல்கிறார் டைரக்டர் ஜிப்ஸி ராஜ்குமார். ஆனால் அந்த பாடலை படமாக்கியபோது ஸ்பாட்டுக்கு வரவேண்டிய பட நாயகிகளில் ஒருவரான சிஞ்சு மோகன் வராமல் டைரக்டரை தவிக்க விட்டு விட்டாராம். இதனால் அவருக்கும், தயாரிப்பாளருக்குமிடையே ஸ்பாட்டில் பெரிய சண்டை நடைபெற்றதாம்.

இதுபற்றி ஜிப்ஸி ராஜ்குமார் கூறுகையில், அந்த ஓப்பனிங் பாடலில் கே.பாக்யராஜ், பொன்வண்ணன், சாரா ஷெட்டி, சிஞ்சுமோகன் ஆகிய நடிக்க வேண்டும். ஆனால், சாரா ஷெட்டியுடன் இணைந்து நடனமாட வேண்டிய சிஞ்சுமோகன் சொன்னபடி ஸ்பாட்டுக்கு வரவில்லை. அவருக்கு போன் செய்தால், ஒரு முக்கியமான பிரச்சினை காரணமாக இன்னும் கேரளாவில் இருந்து கிளம்பவே இல்லை என்று சொன்னார். அதைக்கேட்டு தயாரிப்பாளர் செம டென்சனாகி என்னிடம் சண்டை போட்டார். அதோடு நாளைக்கு அந்த நடிகை ஸ்பாட்டில் இருந்தாக வேண்டும் என்று கோபத்துடன் சொல்லிவிட்டு சென்றார். அப்போ நான் அவரிடம், இது அய்யனார் படம். அதனால் கண்டிப்பாக அவர் அந்த நடிகையை சரியான நேரத்திற்குள் கொண்டு வந்து சேர்ப்பார் என்று நம்பிக்கை யுடன் சொன்னேன்.

அதேபோல், அன்று இரவு 2 மணிக்கு எனக்கு திடீரென்று போன் செய்த சிஞ்சு மோகன், மதுரைக்கு வந்து விட்டதாக சொல்லி, கார் அனுப்ப சொன்னார். அதையடுத்து மறுநாள் 7 மணிக்கு அவர் ஸ்பாட்டில் நின்றார். அப்போது அங்கு வந்த தயாரிப்பாளர் சிஞ்சுமோகனை ஆச்சர்யத்துடன் பார்த்தார். இந்த மாதிரி அய்யனார் வீதி படப்பிடிப்பில் நடக்காது என்று நினைத்த பல விசயங்கள் குறித்த நேரத்தில் நடந்து எங்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கின்றன என்கிறார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget