செம்பருத்திச் செடிக்கு மருத்துவ குணங்கள் அதிகம், செம்பருத்தி இலைகள் மிகவும் குளிர்ச்சியானவை.
இரத்தத்திலுள்ள பெருவாரியான கப-பித்த தோஷங்களினால் ஏற்படும் உபாதைகளை நீக்கி இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் திறன் கொண்டது. உடலில் ஏற்படும் எரிச்சலை நீக்கும், கல்லீரல் உபாதைகளை நீக்கி சுறுசுறுப்படையச் செய்யும். உடல் தளர்ச்சியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் திறன் கொண்டது. கல்லீரல் உபாதைகளை நீக்கி சுறுசுறுப்படையச் செய்யும்.
உடல் தளர்ச்சியை நீக்கி உற்சாகப்படுத்தும். உட்புறப்பகுதிகளில் ஏற்படும் சீழ்க் கட்டிகளை உடைத்து வெளியேற்றும்.
இலைகளை அரைத்து தோலில் பூசி தேய்த்துக் குளிக்க படை, சொறி, சிரங்குகளை அகற்றி விடும். அத்துடன் சிறுநீர் எரிச்சல், வலி குறைந்து விடும்.
செம்பருத்தி இலைகளை விட பூவின் மொட்டுகளுக்கு சக்தி அதிகம். நறுமணத்துடன் கூடிய அதை வாயில் போட்டு மென்றால் கசப்பாக இருக்கும், குளிர்ச்சியானது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமையும்.