100 கோடி பயனாளர்களை எட்டும் பேஸ்புக்!


சமூக இணைய தளங்கள் செயல்பாட்டில் முதல் இடம் பிடித்துள்ள பேஸ்புக் தளத்தின் பயனாளர் எண்ணிக்கை 100 கோடியைஎட்டும் என ஐ-கிராசிங் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு பேஸ்புக் பயனாளர் எண்ணிக்கை 80 கோடியாக இருந்தது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில்,
இந்த தளத்தின் பயன்பாடு சீராக உயர்ந்து வருவதன் காரணமாக இந்த எண்ணிக்கையினை பேஸ்புக் எட்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் பல புதிய வசதிகளை பேஸ்புக் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக, நண்பர்களிடையே ஆடியோ மற்றும் வீடியோ பைல்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதி அனைவரையும் கவர்ந்துள்ளது. 
பேஸ்புக் சமூக தளத்திற்குப் போட்டியாக, கூகுள் நிறுவனம் அமைத்த கூகுள் ப்ளஸ் தளம் நாளொன்றுக்கு 6 லட்சத்து 25 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் இந்த எண்ணிக்கை 40 கோடியை எட்டும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget