ஒரு வாசகர், கருப்பு வெள்ளை போட்டோக் களுக்கு எளிதாக வண்ணம் தீட்டும் சாப்ட்வேர் புரோகிராம் உள்ளதா? என்னால் போட்டோ ஷாப் போன்ற புரோகிராம் களில் பொறுமையாகப் பணியாற்ற முடியவில்லை. தொழில் ரீதியாகவும் பழகுவதற்கும் எளிதான சாப்ட்வேர் தொகுப்பு ஒன்று தேவை என நிலவைதேடி வட்டத்தைத் தொடர்பு கொண்டார். இந்த சிந்தனையுடன் இணையத்தில் தேடியபோது கிடைத்தது தான் "பிளாக் மேஜிக்' என்ற சாப்ட்வேர் தொகுப்பு.
"பிளாக் மேஜிக்' சாப்ட்வேர் விண்டோஸ் இயக்கத்தில் வண்ணம் மாற்றும் பணிக்காகவே வடிவமைக்கப் பட்டது. கருப்பு வெள்ளை படங்களை வண்ணத்தில் கொண்டு செல்வது மட்டுமின்றி, வண்ணப் படங்களையும் கருப்பு வெள்ளையில் மாற்றித் தருகிறது. போட்டோ எடிட் செய்வதற்கு நிறைய பாடங்களை எல்லாம் இதில் படிக்க வேண்டியதில்லை. இந்த சாப்ட்வேர் தொகுப்பில் “Timebrush” என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Download BlackMagic என்ற லிங்க்கில் கிளிக் செய்து இதனை தரவிறக்கம் செய்திடலாம். இதன் இயக்க பைல் இறங்கியவுடன், இதனை இன்ஸ்டால் செய்திட ஒரு ஐகான் கிடைக்கும். blackmagic.exe என்ற இதன் பைலில் கிளிக் செய்தால், புரோகிராம் பதியப்படும். நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துவதாக இருந்தால், இதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Run as administrator என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இன்ஸ்டால் செய்த பின்னர், புரோகிராமினை இயக்கவும். கிடைக்கும் மெனுவில், Load Image என்ற பட்டனில் கிளிக் செய்தால், வண்ணம் மாற்ற வேண்டிய படத்தை இமேஜ் எடிட்டரில் திறந்து வண்ணம் மாற்றும் வேலையைத் தொடங்கலாம். எந்த எந்த பகுதியில், என்ன வண்ணம் அமைக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்க எளிதான மெனு தரப்படும். படத்திற்கான வண்ணம் மட்டுமின்றி, பின்புலத்தில் இருக்க வேண்டிய வண்ணத்தினையும் அமைக்கலாம். நீங்கள் இவற்றைத் தேர்ந்தெடுக்கையில், பிளாக் மேஜிக், என்ன மாதிரியான படத்தில் வண்ணங்கள் மாற்றப்படுகின்றன என்பதனை உணர்ந்து, உங்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கும். இறுதியாக அனைத்து வண்ணங்களும் உங்களுக்கு நிறைவாகத் தோன்றினால், அந்த படத்தினை புதிய பெயரில் சேவ் செய்துவிடலாம். இவை அனைத்தையும் மேற்கொள்ள ஒரு சில நிமிடங்களே ஆகின்றன என்பது இதன் சிறப்பு.