பஜாஜ் 700 சிசி பல்சரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது

அடுத்த ஆண்டு 350 சிசி பல்சரை களமிறக்க திட்டமிட்டுள்ள பஜாஜ் ஆட்டோ, அடுத்ததாக 700 சிசி பல்சரையும் களமிறக்க உள்ளதாக அந்த நிறுவன வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது. பல்சர் பிராண்டை தனியாக பிரிக்க பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பல்சர் பைக்குகளில் பஜாஜ் ஆட்டோவின் பெயர் இருக்காது. இதைக்கருத்தில்க்கொண்டு,

பல்சர் பிராண்டில் பல புதிய மாடல்களை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்து வருகிறது.

135 சிசி பல்சர், 150 சிசி பல்சர், 180 சிசி பல்சர், 200 சிசி பல்சர் மற்றும் 220 சிசி பல்சர் மாடல்களை பஜாஜ் வரிசை கட்டி விற்பனை செய்து வருகிறது.

இதில், புதிய 200 சிசி என்எஸ் என்ற புதிய பல்சர் மாடலையும் பஜாஜ் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு 350 சிசி பல்சரையும் பஜாஜ் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது 700 சிசி பல்சரையும் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறுகையில், எதிர்காலத்தில் அதிக திறன் கொண்ட எஞ்சின் கொண்ட பல்சர் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தற்போது பஜாஜ் ஆட்டோ 700 சிசி எஞ்சினுடன் பல்சரை களமிறக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

700 சிசி பல்சர் அறிமுகம் செய்யப்பட்டால், முதன்முறையாக, மார்க்கெட்டில் அதிக சிசி எஞ்சின் கொண்ட மார்க்கெட்டில் தடம் பதிக்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பஜாஜ் ஆட்டோ பெறும்.

தவிர, 700 சிசி பல்சரை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்தால், வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ள அதிக திறன் கொண்ட பைக் மார்க்கெட்டில் பல்சர் பெரும் புயலை கிளப்பும் என்றும் பல வெளிநாட்டு நிறுவனங்களின் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு பெரும் சவாலாக அமையும் என்றும் கருதப்படுகிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget