5 டன் எடையில் உருவாக்கப்பட்ட பைக், உலகின் அதிக எடை கொண்ட பைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு ஜெர்மனியிலுள்ள ஸில்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் டிரோ நீபேல். பைக் பிரியரான இவர் தனது நண்பருடன் சேர்ந்து உலகின் ராட்சத பைக்கை உருவாக்கியுள்ளார்.
மான்ஸ்டர் என்று பெயரிடப்பட்ட இந்த பைக்கை தனது ஊருக்கு அருகிலுள்ள நகரத்தில் சோதன ஓட்டம் நடத்தி காண்பித்தார்.
ஹாலிவுட் படங்களில் வரும் வித்தியாசமான கிராபிக்ஸ் விலங்குகள் போன்று இருக்கும் இந்த பைக் 4,740 கிலோ எடை கொண்டது. இந்த பைக் ஐந்தரை மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது.
இந்த பைக்கில் 800 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் டி55 பீரங்கியில் பொருத்தப்படும் எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.
ராணுவ வாகனங்களின் பழைய உதிரிபாகங்களை கொண்டு இந்த பைக்கை டிலோவும் அவரது நண்பரும் வடிவமைத்துள்ளனர்.
இந்த பைக்கின் ஹேண்டில் பாரை பார்த்தாலே தலைசுற்றுகிறது. அவ்வளவு நீளம். இந்த பைக்கின் பக்கவாட்டில் மற்றொருவர் உட்காருவதற்கு வசதியாக சைடு கார் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.