தமிழக மண்வாசனையுடன் மெரினா - திரை விமர்சனம்


இயக்குனர் பண்டிராஜ் பசங்க படத்தின் மூலம் தன்னை நிருபித்தது மட்டுமில்லாமல் தன்னால் அதிக பட்ஜெட் கொண்ட படங்களையும் கையாள முடியும் என்பதை வம்சம் படத்தின் மூலம் நிருபித்தார். தற்போது தன் சொந்த தயாரிப்பாக மெரினா என்ற படத்தை எழுதி இயக்கி உள்ளார். சுண்டல், தண்ணீர் பாக்கெட்,மற்றும் சென்னை மெரினா மணலில் நொறுக்கு தீனி விற்கும் சிறுவர்களையும் அவர்களுக்கு பின்னால் உள்ள சோகங்களையும் முடிந்தவரை
விறு விறுப்பாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் பண்டிராஜ். படிக்கவேண்டும் என்ற ஆசையில் சித்தப்பாவிடம் இருந்து தப்பித்து சென்னை வரும் அம்பிகாபதி(பாண்டி) தண்ணீர் பாக்கெட் விற்கிறான். ஏற்கனேவே அங்கே தண்ணீர் பாக்கெட் விற்கும் கைலாஷ் நண்பனாகிறான். சிறு தவறு செய்துவிட்டு சென்னை வரும் கைலாசை தேடி போலீஸ் அலைகிறது. பெட்ரோல் திருடும் சிறுவன் மூலம் போலீஸ் கைலாசை பிடிக்கிறது. இதற்கிடையில் எப்படியாவது காதலித்து, காதலியுடன் பீச் மணலில் அமர வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வரும் செந்தில் நாதன்(சிவகார்த்திகேயன்). அவருடைய காதலி சொப்ன சுந்தரி(ஓவியா) அவர்களுக்கு இடையே நடக்கும் ஊடல், கூடல் என்று ஒரு புறம் கதை நகர்கிறது.


மசாலா தனங்கள் எதுவில்லாமல் தன்னுடைய திரைக்கதையை நம்பி களம் இறங்கி இருக்கும் இயக்குனருக்கு சபாஷ் போடலாம். கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை ஆனால் கதை நாயகர்கள் அனைவரும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். தாத்தா, குதிரைகாரர், பையித்தியமாக நடித்திருப்பவர், அன்னம்மவாக நடித்திருப்பவர் என்று ஒவ்வெருவரும் அருமையான தேர்வு. மொத்தத்தில் மெரினாவை சுற்றி பார்த்த நிறைவை தறுகிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget