புதிய தொழில்நுட்பங்களை கையாள்வதில் மாணவர்கள் அதிக மதி நுட்பம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இதற்கு புனேவை சேர்ந்த விக்னேஷ் சுந்தர்ராஜன் என்ற 14 வயது நிரம்பிய மாணவன் ஓர் சிறந்த உதாரணம். இவர் புதிய சோஷியல் நெட்வொர்கிங் தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இது ஃபேஸ்புக் போன்ற வசதிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் லேன்குவேஜ்ஜில் ஸீட்டா என்றால் பிட் ஆஃப் மெமரி என்று அர்த்தம்.
நான்கு மாதங்கள் கடுமையான முயற்சி மற்றும் உழைப்பிற்கு பிறகு இந்த புதிய சோஷியல் நெட்வொர்கிங் வலைதளத்தை அவர் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த ஸீட்டா சைட் லாபம் ஈட்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுக்கர்பெர்க் சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக்கை உருவாக்கும்போது, லாபம் ஈட்டும் நோக்கத்துடன் உருவாக்கவில்லை. அவர் எதேட்சையாக ஆரம்பித்த ஒன்று தான் ஃபேஸ்புக். ஆனால் அது மக்களை இந்த அளவு சென்றடைந்ததற்கு பிறகு தான் அதில் உள்ள கடும் உழைப்பு அனைவருக்கும் தெரிய வந்தது.
இன்று ஃபேஸ்புக் நாளுக்கு நாள் இமாலய வெற்றியை தொட்டு கொண்டு இருக்கிறது. 14 வயது நிரம்பிய விக்னேஷின் முயற்சியும், பெரிய வெற்றியை தேடி தரும் என்று நம்பலாம்.