சரித்திரம் படைக்க வரும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்ஸின் புதிய அம்பாசிடர்


நம் நாட்டில் பட்டி தொட்டியெங்கும் புகழ்பாடிய அம்பாசடர் கார் பல்வேறு காரணங்களால் தற்போது மார்க்கெட் இழந்துவிட்டது. இந்த நிலையில், புதிய கார்களுக்கு போட்டி போடக்கூடிய வகையில், அம்பாசடரை மறு வடிவமைப்பு செய்து ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது.



வரிச்சலுகை பெறும் விதத்தில் புதிய அம்பாசடர் கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்ட்டுள்ளது. புதிய ஸ்விப்ட் டிசையர் போன்று காம்பெக்ட் செடான் ரகத்தில் வரும் புதிய காம்பெக்ட் அம்பாசடர் கார் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக வரும் என்று தெரிகிறது.


இந்த டீசல் எஞ்சின் காமன் ரயில் டீசல் எஞ்சின் தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும். மேலும், 1.8 லிட்டர் இசுஸு பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எஞ்சின்களை புதிய அம்பாசடரில் பொருத்தி அறிமுகம் செய்ய முடியாத நிலைக்கு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தள்ளப்பட்டுள்ளது.


ஏனெனில், 1.2 லிட்டர் வரையிலான பெட்ரோல் எஞ்சின்களுக்கு மட்டுமே மத்திய அரசு காம்பெக்ட் கார்களுக்கான வரிச்சலுகையை பெற முடியும் என்பதால் அதில் சிக்கல் இருக்கிறது. இந்த நிலையில், இழந்த மார்க்கெட்டை புதிய அம்பாசடர் மூலம் மீண்டும் பிடிக்க முடியும் என்ற பெரும் நம்பிக்கையுடன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget