நோக்கியா மொபைலில் கேமரா சென்ஸார் வசதி அறிமுகம்!


சிறந்த மொபைல் தயாரிப்பாளர்களுக்கான இடத்தை இந்த முறை நோக்கியா பிடித்து இருக்கிறது. அற்புதமான தொழில் நுட்பத்தை வழங்கியதால் தான் நோக்கியா முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. அத்தகைய உயர்ந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் நோக்கியா நிறுவனம் நோக்கியா-803 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது.
இந்த நோக்கியா-803 ஸ்மார்ட்போன் சிம்பையான் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது அதிகபட்சம் 4 இஞ்ச் திரை வசதி கொண்டதாகவும் இருக்கும். இது போன்ற அகன்ற திரை ஸ்மார்ட்போனுக்கு ஒரு சிறப்பான தோற்றத்தை வழங்குவதோடு மட்டும் அல்லாமல் எந்த தகவல்களையும் தெளிவாகும் பார்க்க முடியும்.
இந்த நோக்கியா-803 ஸ்மார்ட்போனில் கேமரா சென்ஸார் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த தொழில் நுட்பம் பற்றிய முழு விவரம் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. இந்த நோக்கியா-803 ஸ்மார்ட்போன் சில தனித்தன்மையான தொழில் நுட்பங்களை பெற்றிருக்கும். நோக்கியா-803 ஸ்மார்ட்போன் வருகிற மே மாதம் சர்வதேச சந்தைகளில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget