கல்யாணத்த பத்தி நினைக்க விரும்பல - சோனியா

இன்னும் நான்கைந்து ஆண்டுகளுக்கு திருமணத்தைப் பற்றி நினைக்கக் கூட விரும்பவில்லை என்றார் நடிகை சோனியா அகர்வால்.


இயக்குநர் செல்வராகவனுடன் விவாகரத்து பெற்ற பிறகு முதல் முறையாக ஹீரோயினாக சோனியா அகர்வால் நடித்துள்ள படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். 



இந்தப் படம் நாளை திரைக்கு வருகிறது. ஒரு நடிகை சினிமாவில் அறிமுகமாக எந்த அளவு கஷ்டப்படுகிறாள், எதையெல்லாம் சகஜமாக இழக்கிறாள் என்பதை பச்சையாக சொல்லும் படம் இது.


இந்தப் படம் குறித்து இன்று நிருபர்களிடம் சோனியா அகர்வால் கூறுகையில், "நடிகையாக அறிமுகமாக கற்பை இழக்க தயாராக இருக்க வேண்டும் என்பது போல இந்தப் படத்தி்ல வைக்கப்பட்டுள்ள காட்சிகள் கற்பனையானவையே. நான் நடிகையாக இதுபோல எதுவும் செய்யவில்லை. நான் மிக டீசன்டாக சினிமாவுக்கு வந்தேன். என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.


விவாகரத்து பெற்ற ஒரு நடிகை மீண்டும் கதாநாயகியாகவே நடிப்பது பெரிய விஷயம்தான். நான் அந்த வகையில் அதிர்ஷ்டசாலி. 


மீண்டும் திருமணம் என்பதைப் பற்றி நினைக்க விரும்பவில்லை. அட்லீஸ்ட் ஒரு ஐந்து வருடங்களுக்கு திருமணம் பற்றி நினைக்க மாட்டேன்," என்றார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget