விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்துகொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸின் ஏழாம் அறிவு படத்தின் வெற்றியாலும், விஜய் நடித்த நண்பன் படத்தின் வெற்றியாலும் துப்பாக்கி படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் முருகதாஸ் இந்த படத்தை இந்தியிலும்
ரீமேக் செய்யப் போவதாக தெரிகிறது. இந்தியில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறாராம். ஹீரோயின் வேட்டை மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.
இதற்கு முன் முருகதாஸ் ”இனி நான் என் படங்களை ரீமேக் செய்யமாட்டேன். எத்தனை முறை தான் செய்ததையே திரும்பத் திரும்ப செய்வது” என்று அலுத்துக் கொண்டார். இப்போது துப்பாக்கி இந்தியில் ரீமேக் என்ற செய்தி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.