ஒரு கல்யாணத்தால் தனது சின்ன வயதில் சிதறுண்டு போகும் தங்களது கூட்டு குடும்பத்தை, ஒரு காதலால் சேர்த்து வைக்கும் வித்தியாசமான வில்லனின் கதைதான் "பத்திரமா பாத்துக்குங்க" மொத்த படமும்!
சின்ன வயதில் தானும் - தன் தாயும், தந்தையை இழந்து தன் தாத்தாவின் குடும்பத்தை விட்டு பிரியக்காரணமான சொந்தங்களை பழிவாங்க துடிக்கும் வில்லன், அவரையும் அறியாமல் மொத்த குடும்பத்தையும் ஒரு காதலின் மூலம் ஒன்று சேர்ப்பது தான்
இதுவரை நாம் பார்த்திராத பத்திரமா பாத்துக்குங்க படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான கதைக்களம். பொதுவாக இதுமாதிரி நல்ல காரியங்களை நம் தமிழ் படங்களில் ஹீரோக்கள் தான் செய்வார்கள். ஆனால் இந்தப்படத்தில் அதுதான் வித்தியாசம். இந்த வித்தியாசத்திற்காகவே இயக்குநர் வி.சி.சோமசுந்தரத்தைப் பாராட்டலாம்.
ஷரண் குமார், ஸ்மிதா ஸ்ரீ, சம்பத்ராம், வையாபுரி, செந்தில் குமார், தினேஷ், சத்யா, பீர்பால், ஹரிஷ் ஜோஸ்வான், ராஜ்குமார், சாந்தி, ஜோதி, ராஜா, ராஜேஷ், ஷோபாராணி என இப்படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
ஜித்துவின் ஒளிப்பதிவும், சிவாஜி ராஜாவின் இசையும், படத்திற்கு பெரிய பலம்! எல்லோரும் பெற்றத்தாயை பாத்திரமா பாத்துக்குங்க சொல்லும் க்ளைமாக்ஸ் மெசேஜ் எதிர்பாராதது. அதுவே புதிரானது - புதியது! - ஆகமொத்தத்தில் "பத்திரமா பாத்துக்குங்க" பார்க்கலாம்!!