ஜெனீவா தீர்மானத்தால் இந்தியா ஆபத்தை சந்திக்கும் - கலியுக ராவணண் & பிரதர்ஸ்

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் இந்தியாவுக்குத்தான் பாதக விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டலாக சொல்லியுள்ளார் ராஜபக்சே பிரதர்ஸில் ஒருவரான பசில் ராஜபக்சே. தனக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் இந்தியா வாக்களித்ததை இலங்கையால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் அங்கு வாக்களித்து விட்டு மறுபக்கம் படு வேகமாக
இல்கையை சமாதானப்படுத்த ஏகப்பட்ட வேலைகளை இந்தியா செய்து வருகிறது. ஏன் வாக்களித்தோம் என்பதை விழுந்து விழுந்து விளக்கிக் கொண்டிருக்கிறது.


இந்த நிலையில் பசில் ராஜபக்சே ஒரு பேச்சு பேசியுள்ளார். அவர் கூறுகையில், 


ஜெனீவா தீர்மான முடிவுகள் இந்தியாவின் பிராந்தியத் தலைமைத்துவத்திற்கு சவாலாக அமைந்துள்ளது. தெற்காசிய நாடுகளில் பெரும்பான்மையானவை இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன.


இந்தியா, அமெரிக்காவிற்கு ஆதரவாக வாக்களித்தது. எனினும், மாலத்தீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வெளியிட்டிருந்தன.


மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்காத பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்திருந்தது. இதன்படி, பிராந்தியத்தின் தலைமைத்துவ பதவிக்கான தகுதியை இந்தியா இழந்து வருகிறது என்று பசில் தெரிவித்துள்ளார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget