நிலநடுக்கம் பற்றி அறிய புதியதோர் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன். ஜியோநெட் என்ற இந்த அப்ளிக்கேஷன் மூலம் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை உடனுக்குன் தெரிந்து கொள்ள முடியும். எந்தெந்த இடங்களில் நிலநடுக்கும் வந்துள்ளது, எந்நெந்த பகுதிகள் பாதித்துள்ளது என்பது போன்ற தகவல்களை இருந்த இடத்தில்
இருந்து எளிதாக பெற முடியும்.
இதே போல் எர்த்குவேக் என்ற இன்னொரு அப்ளிக்கேஷனும், நிலநடுக்கத்தை பற்றிய தகவல்களை வழங்கும். இந்த அப்ளிக்கேஷன் 24 மணி நேரமும் நிலநடுக்கும் பற்றிய முழு விவரத்தினையும் தெரியப்படு்த்தும்.
இன்னும் சுருக்கமாக சொன்னால் நிலநடுக்கம் பற்றிய செய்திகளை உடனே தெரிந்து கொள்ளவும், மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவும் இந்த அப்ளிக்கேஷன்கள் பெரிதும் உதவும். இந்த அப்ளிக்கேனில் கிடைக்கும் தகவல்களை எஸ்எம்எஸ், இ-மெயில், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் தகவல் பரிமாற்றம் செய்வதன் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தலாம்.
நிலநடுக்கும் வந்த இடங்களை இந்த அப்ளிகேஷன் வழங்கும் மேப் மூலமும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது இந்த ஜியோநெட் ரேப்பிட் அப்ளிக்கேஷனை பெற வேண்டும் என்றால் கூகுள் ப்ளே இணையதளத்தின் மூலம் பெறலாம். இதை பற்றிய தகவல்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.