சிறப்பாக புகைப்படங்களை எடுக்க உதவும் இன்ஸ்டாகிராம் அப்ளிக்கேஷனை 100 கோடி டாலர் கொடுத்து வாங்க உள்ளது ஃபேஸ்புக்.
இந்த இன்ஸ்டாகிராம் வசதியினை ஐபோன், ஐபேட், ஐபோட் டச் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களிலும் பெற முடியும். அது மட்டும் அல்லாமல் இன்ஸ்டாகிராம் அப்ளிக்கேஷனை ஆன்ட்ராய்டு
தொழில் நுட்பம் கொண்ட சாதனங்களுக்கும் இந்த இன்ஸ்டாகிராம் அப்ளிக்கேஷன் எளிதாக சப்போர்ட் செய்யும்.
இந்த இன்ஸ்டாகிராம் அப்ளிக்கேஷனை சமூக வலைத்தளங்களில் முதன்மை பெற்று வரும் ஃபேஸ்புக் 100 கோடிக்கு வாங்க உள்ளது. இதனால் அதிக துல்லியமும், சிறந்த தொழில் நுட்பத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைக்கும் புகைப்படத்தினையும் ஃபேஸ்புக்கில் எளிதாக அப்லோட் செய்யலாம்.
உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமாரக்கள் மூலம் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம். இன்ஸ்டாகிராம் அப்ளிக்கேஷன் மூலம் அதி நவீன தொழில் நுட்ப சவுகரியங்களை பெற முடியும். இதனால் சாதாரனமாக கிளிக் செய்த புகைப்படங்களை கூட, கூடுதல் எழில் கொண்டதாக காட்ட முடியும்.