இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதல் வீடியோ இணைப்பு!


இந்தோனேஷியாவில் தொடர்ந்து மூன்று தடவை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி அலைத் தாக்கியுள்ளது. இந்தோனேஷியாவின் அச்சே மாநிலத்தின் தலைநகரான பண்டா அச்சேவில் இருந்து 495 கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்குள் 33 கிலோ மீட்டரில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டிருந்தது. இதனையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்ட நாடுகள்: இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, மியான்மர், தாய்லாந்து, மாலைதீவுகள், சிங்கப்பூர், மலேசியா, ஓமன், ஈரான், பாகிஸ்தான், வங்கதேசம், கென்யா, தென்னாப்பிரிக்கா என மொத்தம் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் ஓட்டம்: நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் கட்டிடங்கள் அனைத்தும் நடுக்கம் கண்டது. இதையடுத்து மக்கள் ஓட்டம் பிடித்து வீதியில் வந்து குவிந்ததாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர் சேதம், பொருட்சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

2ம் இணைப்பு:

சுனாமி அலை தாக்கியது: இந்நிலையில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கியுள்ளது. சுனாமியால் ஏற்பட்ட சேத நிலவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget