நேற்று இந்தோனேசியாவை மையமாக கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் திரும்பப்பெறப்பட்டது. ரிக்டரில் 8.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த உயிரிழப்புகளும், சேதங்களும் பதிவாக வில்லை. இதேப்போன்று அல்லது இதைவிட பயங்கரமான நிலநடுக்கங்களின் பதிவுகளை இப்போது பார்ப்போம்.
1900 முதல் இதுவரை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் பட்டியல்.
ஆண்டு | இடம் | ரிக்டர் அளவு | பாதிப்பு |
மே 22, 1960 | சிலி | 9.5 | 5000 பேர் உயிரிழப்பு; 2 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர் |
மார்ச் 28, 1964 | அலாஸ்கா | 9.2 | 125 பேர் உஇரிழப்பு; 310 மில்லியன் டாலர் மதிப்பிலான சேதம் |
டிசம்பர் 26, 2004 | இந்தோனேசியா | 9.1 | இந்தியா, இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட 9 நாடுகளில் 2,26,000 மக்கள் உயிரிழப்பு |
நவம்பர் 4, 1952 | ரஷ்யா | 9.0 | உயிரிழப்பு இல்லை |
மார்ச் 11, 2011 | ஜப்பான் | 9.0 | 15000 பேர் உயிரிழப்பு; மிகப்பெரிய அணுஉலை பாதிப்பு ஏற்பட்டது |
பிப்ரவரி 27,2010 | சிலி | 8.8 | 500 பேர் உயிரிழப்பு; 30 பில்லியன் டாலர் மதிப்பில் சேதம்; ஆயிரக்கணக்கானோர் வீடுகள் இழப்பு |
ஜனவரி 31, 1906 | ஈகுவேடார் | 8.8 | 1000 பேர் உயிரிழப்பு |
ஏப்ரல் 11, 2012 | இந்தோனேசியா | 8.7 | சிங்கப்பூர், இந்தியா, இலங்கை, தாய்லாந்திலும் உணரப்பட்டது |
பிப்ரவரி 4, 1965 | அலாஸ்கா | 8.7 | - |
மார்ச் 28, 2005 | சுமத்ரா | 8.6 | 1300 பேர் உயிரிழப்பு |