நடிகர் விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் விஜய் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள்(First Look) நாளை வெளியிடப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் ரசிகர்களால் எழுதி இசையமைக்கப் பட்ட ”இளையதளபதி விஜய்” ஆல்பத்தை நடிகர் விஜய் வெளியிட்டார்.
ஆல்பத்தை வெளியிட்டு பேசிய விஜய் “ துப்பாக்கி படத்தின் First Look போஸ்டர்கள் சித்திரைத் திருநாளன்று(நாளை) வெளியிடப்படும். படம் நன்றாக வந்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய விஜய் “ நடந்து கொண்டிருக்கும் 10-வது, 12-வது வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடிப்பவர்களுடன் ஒரு நாள் முழுக்க மகிழ்ச்சியாக கொண்டாடப்போகிறேன்” என்று அறிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் நன்றாக படிக்கும் மாணவர்கள் இதை நினைத்துக் கொண்டே தேர்வில் கவனம் செலுத்தாமல் போய்விடுவார்களோ என்ற அச்சம் பெற்றவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.நடிகர் விஜய் இந்த அறிவிப்பை தேர்வு முடிந்ததும் அறிவித்திருக்கலாம் என்பது மக்களின் கருத்து.
படத்தின் இயக்குனர் முருகதாஸும் சென்னையில் தான் உள்ளார். கே.கே நகரில் தெருவிளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டிருப்பதை பார்த்த முருகதாஸ் அதை போட்டோ எடுத்து தனது ட்விட்டர் அக்கவுண்டில் பதிவு செய்துள்ளார்.