மர்ம தேசம் 2 ஹாலிவுட் விமர்சனம்!

நடிகர் : ஷாம் வோர்த்திங்டன் 
நடிகை : ரோஸமண்டு பைக் 
இயக்குனர் :ஜோனாதன் லிபிஸ்மேன் 


அளவில்லாத சக்திக்காக அண்ணன் தம்பிக்குள்ளே நடக்கிற சண்டைதான் மர்மதேசம்-2(3டி). கெட்ட சக்திக்கு எதிராக நடந்த சண்டையோட முடிவுல, கேட்ட சக்தியோட தலைவனான நெருப்பு மனுஷனை பாதாள உலகத்துல கொண்டு போய்
அடைச்சு வைச்சுட்டு அதுக்கு தன்னோட தம்பியை காவலுக்கு வைக்கிறார் சீயஸ். இவருக்கு ப்ரிசியஸ், ஏரிஸ்ன்னு ரெண்டு பசங்க. இந்த சண்டையில ப்ரிசியஸோட மனைவியும், அம்மாவும் இறந்து போயிடுறாங்க. இதெல்லாம் பழைய கதை. பாதாள உலகத்துல அடைச்சு வைச்சிருக்கிற நெருப்பு மனுஷனை வெளியே கொண்டு வந்தா ரெண்டு பேருக்கு சாகாவரமும், நிறைய விசேஷ சக்திகளும் கிடைக்கும்ன்னு தெரியவர, சீ‌யஸோட மகன்ல ஒருத்தனான ஏரிஸ், நெருப்பு மனுஷனுக்கு காவலுக்கு இருக்கிற தன் சித்தப்பாவோட சேர்ந்து அவனை வெளியே கொண்டு வர திட்டம் தீட்டுறான். அதுக்கு தன் அப்பாவையே பலி கொடுக்கலாம்ன்னு முடிவு பண்றான் ஏரிஸ். ஏன் இந்த கொலவெறி!ன்னா... அவர் தன்னோட சக்திகளை ஏரிஸ்க்கு கொடுக்காம, இன்னொரு பையனான ப்ரிசியஸ்க்கு கொடுத்துட்டார். அதனால அப்பாவையும், ப்ரிசியஸோட பை‌யனையும் பாதாள உலகத்துக்கு தூக்கிட்டு போய் அடைச்சு வைச்சிடுறான். இதை தெரிஞ்சுக்கிட்ட ப்ரிசியஸ், தன்னோட சகோதரனுக்கு எதிரா சண்டை போடுறான். அப்பாவும், பையனும் பிழைச்சாங்களா...? என்பது 3டியில் நெருப்பு பறக்கிற அதிரடி க்ளைமாக்ஸ். படத்துல பேருக்குத்தான் கதை. மத்தபடி படம் முழுக்க பிரம்மாண்டம் தான் படத்தோட களம்...! விசித்திர உலகம் என்பதால இயக்குநரோட கற்பனை மிருகம் கண்டபடி ஓடியிருக்கு. பாதாள உலகத்தோட வடிவமைப்பு, ரெண்டு உடம்பு அரக்கர்கள், பெரிய பெரிய கண் மனுஷர்கள், பறக்கிற குதிரை, மலையை விட பெரிய நெருப்பு மனுஷன், நெருப்பை கக்கிட்டே பறந்து, பறந்து தாக்குற ரெண்டு தலை டிராகன்... இப்படி வித்தியாசமான ஜந்துக்களோட படையெடுப்புகள் படம் முழுக்க ரசிகர்களை வாய் பிளக்க வைக்குது. படத்தோட பிரம்மாண்டத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கிறது ஸ்பெஷல் எபெக்டும், கேமராவும்தான். ஆஸ்கர் கிடைச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல! பிரம்மாண்டத்தை விரும்புறவங்க தவறாம பார்க் வேண்டியா படம் மர்மதேசம் 2.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget