நகைச்சுவை நடிகர் சந்தானத்தை பார்த்தாலே ஹன்சிகாவால் சிரிப்பை அடிக்க முடியவில்லையாம்.
ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு ஹன்சிகா கோலிவுட்டின் பிசியான நடிகையாகிவிட்டார். சேட்டை, சிங்கம் 2, வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் வாலு, சேட்டை, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் காமெடி நடிகர் சந்தானமும் நடிக்கிறார். அவர்கள் இருவரும்
வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் ஏற்கனவே ஒன்றாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானம் குறித்து ஹன்சிகா கூறுகையில்,
நான் நடிக்கும் கிட்டத்தட்ட னைத்து படங்களிலும் சந்தானமும் நடிக்கிறார். வேட்டை மன்னன் படத்தில் இதுவரை சந்தானத்துடன் எனக்கு எந்த காட்சியும் இல்லை. ஆனால் இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட ஷூட்டிங்கி்ல் இருக்கலாம். சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேச மாட்டார். ஆனால் அவரைப் பார்த்தாலே எனக்கு சிரிப்பு வரும். அவர் என்னை ஏஞ்சலினா ஜூலி என்று தான் அழைப்பார்.
அவர் அதற்கான காரணத்தை கூறியபிறகு எனது சிரிப்பை அடக்க கொஞ்ச நேரம் ஆகிறது என்றார்.
உடல் எடையைக் குறைக்க அமெரிக்கா சென்றதாகக் கூறப்படுவது உண்மையில்லை என்று அவர் தெரிவி்ததார். அப்படின்னா ஹன்சிகா கொழுக், மொழுக்காகத் தான் இருப்பார்.
ஹன்சிகா சீரியஸா நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்கும்போது அங்கு சந்தானம் இல்லாம பார்த்துக்கோங்க...