இந்தியாவில் இதுவரை வெளியான ஹாலிவுட் திரைப்படங்களிலேயே பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது "தி அமேசிங் ஸ்பைடர்மேன்" திரைப்படம். வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 29) இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. 3டி, 2டி, மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் இந்தப் பிரம்மாண்ட திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் டெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. ஆயிரம் பிரிண்ட்களுக்கு மேல் இந்தப் படம் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சோனி பிக்சர்ஸ், இந்தியாவின் நிர்வாக இயக்குனர் கூறுகையில் "தி அமேசிங் ஸ்பைடர் மேன்"
இந்தியாவிலேயே நாங்கள் செய்யும் மிகப்பெரிய ரிலீஸ் ஆகும். இந்தியாவில் ஸ்பைடர் மேன் ரக திரைப்படங்களுக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக டப்பிங் செய்யப்பட்ட மண்டல மொழி வடிவங்களில் இது ஒரு பெரிய சக்சஸ் ஆகும்.
ஸ்பைடர் மேன் திரைப்பட வரிசையில் இந்தப் படம் வித்தியாசமானது இது வரை கூறப்படாத ஒரு கதை இதில் கூறப்பட்டுள்ளது. பீட்டர் பார்க்கர் கதையின் ஒரு வேறு பரிமாணத்தை இந்தப் படம் காட்டியுள்ளது. பெற்றோரால் புறக்கணிக்கப்படுகிறான் பீட்டர் பார்க்கர். ஆனால் அவனை அவனது மாமா பென் மற்றும் ஆன்ட் மே ஆகியோரால் வளர்க்கப்படுகிறான். அவன் தன்னை மீண்டும் கண்டுபிடித்துக் கொள்ளும் ஒரு முயற்சியே இந்தப் படம். ஒருநாள் புதிரான ஒரு பிரீஃப்கேசை கண்டெடுக்கிறான் பீட்டர். அது அவனது தந்தையினுடையது. அதன் மூலம் தன் பெற்றோர் காணாமல் போனது எப்படி என்று அவன் அறிய முற்படுகிறான். இந்த தேடல் அவனை அவன் தந்தையின் முன்னாள் கூட்டாளிகளிடம் கொண்டு சேர்க்கிறது. அதிலிருந்து அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், காதல், மோதல் அனைத்தும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளது இந்த அமேசிங் ஸ்பைடர் மேனில். வெள்ளிக்கிழமை இந்தப் படம் திரைக்கு வருகிறது.