புதிய கமன்ட் எடிட்டிங் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது சமூக வலைத்தளமான பேஸ்புக். போட்டோ வியூவர் போன்ற பல புதிய வசதிகளை உருவாக்கி கொடுத்த பேஸ்புக் இப்போது கமன்ட் எடிட்டிங் ஆப்ஷனையும் வழங்குகிறது. முன்பெல்லாம் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்பது போல எழுதிய கமன்ட் எழுதியது தான். அதை எடிட் செய்ய முடியாது என்று இருந்தது. அப்படியே எழுதிய கருத்தினை மாற்ற வேண்டும் என்றால் அந்த கமன்ட்டை டெலிட் செய்து,
அதன் பிறகு புதிதாக மீண்டும் கமன்ட் எழுதி போஸ்ட் செய்ய வேண்டி இருந்தது.
ஆனால் இனி கமன்ட்களை எடிட் செய்யும் வேலையினை எளிதாக்குகிறது பேஸ்புக். இதில் அவரவர்களது கருத்துக்களை எடிட் செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கமன்ட்டின் பக்கத்தில் கொடுக்கப் பட்டிருக்கும் பென்சில் போன்ற குறியீடை க்ளிக் செய்தால் போதும். எடிட் அல்லது டெலிட் என்று இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றது. இதில் எடிட் ஆப்ஷனை க்ளிக் செய்து எளிதாக வேண்டிய திருத்தத்தினை செய்யலாம். இந்த கமன்ட் எடிட்டிங் வசதி சிலரின் பேஸ்புக் பக்கத்தில் கிடைத்து விட்டது. ஆனால் சிலரது பேஸ்புக் பக்கத்தில் இன்னும் கிடைக்கவில்லை. எழுதும் கருத்துக்களில் ஏதேனும் தவறிருந்தால், அதை திருத்தி கொள்ள பயன்படும் இந்த கமன்ட் எடிட்டிங் வசதி பேஸ்புக்கில் அவசிமான ஒன்று தான்.