நேற்று பில்லா 2 உலகம் முழுவதும் வெளியாகி ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் பாகம் வந்த அளவுக்கு இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களை கவருமா என்ற சந்தேகம் வெளியாகும் வரை இருந்தது. ஆனால் இன்று அந்த ஊசலாட்டம் யாருக்கும் இல்லை.
படம் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. ரொம்பப் பிடித்திருக்கிறது. படம் சூப்பர் என்று கத்திக்கொண்டு வெளியே வரும் ரசிகர்களைப் பார்த்து படம் பார்க்க காத்திருப்பவர்கள் வெறி கொள்வதை திரையரங்குகளில் பார்க்க முடிந்தது. சென்னையில் மட்டும் 50 திரையரங்குகள். இதில் மாயஜாலில் நேற்று மட்டும் 76 காட்சிகள். மங்காத்தா படத்துக்கு 75 காட்சிகள் திரையிட்டதே இதுவரை சாதனையாக இருந்தது. அதனை பில்லா 2 முந்தியிருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து திரையரங்குகளும் 100 சதவீதம் ஹவுஸ்ஃபுல். கேரளா, ஆந்திராவிலும் கிட்டத்தட்ட அதேநிலைதான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நான் ஈ படம் பில்லா 2 வுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்திலும், கேரளாவிலும் அந்த ஈ பயத்தை ஓடஓட விரட்டியிருக்கிறது பில்லா 2. பில்லா 2 மெகா ஹிட் என்பதை முதல் ஷோவே தெரியப்படுத்தியிருக்கிறது.