ஓரினச் சோர்க்கையாளர்களுக்கான பிரத்தியக குறியீட்டை அறிமுகம் செய்துள்ளது சமூக வலைத்தளமான பேஸ்புக். ஒருவரின் திருமண விவரத்தினை அடையாளக் குறியீட்டின் மூலம் தெரிவிக்கும் வசதியை கொண்ட பேஸ்புக், அதில் இப்போது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான அடையாள குறியீட்டினையும் அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக். பேஸ்புக்கின் புதுமையான மற்றும் ஆழமான இந்த யோசனை மிக பாராட்டிற்குரியது என்று தான் சொல்ல வேண்டும்.
சமூகத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிக குறைவு.
இன்னும் சொல்லப்போனால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான முக்கியத்தவம், சமூகத்தினரால் அதிகம் கொடுக்கப்படுவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
உடலாலும், மனதாலும் நிறைய மாறுதல்களை சந்தித்து வரும் ஓரிணச் சேர்க்கையாளர்களின் நிலை அதிக வலியுடையதாகத் தான் எல்லா இடங்களிலும் எடுத்துக்காட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவர்களுக்கான இடமும் குறைவாகவே இருக்கிறது. அந்த வகையில் பேஸ்புக் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான ஓர் புதிய அடையாளக் குறியீட்டினை உருவாக்கி இருக்கிறது என்றால், பேஸ்புக் வெற்றியை நோக்கிய நகர்வதற்கான காரணமும் ஓரளவு புலப்படும்.