பில்லா2 - டானுக்கு டான் ஆன சுதன்சு பாண்டே!

இந்தியில் கில்லாடி, கஹானி, மர்டர், சிங்கம் போன்ற வெற்றி படங்களில் நடித்த பிரபல நடிகர் சுதன்சு பாண்டே, தற்போது அஜித் நடித்து வெளியாக உள்ள பில்லா-2வில் வில்லனாக அறிமுகமாக உள்ளார். இதுபற்றி அவரிடம் பேசியபோது, தமிழ் மொழியில் அஜித் படத்தில் நடிக்க அறிமுகமாவது ரொம்ப மகிழ்ச்சி. இதற்காக 12 கிலோ எடை கூட்டியு‌ள்ளேன். பில்லாவில் அபாஸி என்ற டான் ரோலில் நடித்து உள்ளேன்.
40 வயது நிறைந்த பிசினஸ் மேன்னாக நடித்துள்ளேன். அஜித் என்னிடம் வேலைக்கு சேருவார். எனக்கு ஜோடி தான் ப்ரூணா அப்துல்லா. ரொம்ப அழகான பெண், நல்ல நடிகை. அவர் சண்டைக்காட்சி, துப்பாக்கிசூடு என்று தூள் கிளப்பி இருக்கிறார். நான் இந்த படத்தில் ரொம்ப சிரத்தை எடுத்து நடித்துள்ளேன். இதற்காக கடவுளுக்கு என் நன்றியை சொல்கிறேன். படத்தில் நான் தமிழ்பேச நிறைய பயிற்சி எடுத்துள்ளேன். குறிப்பா நான் அஜித்கிட்ட பேசுற டயலாக் ரசிகர்கள் ரொம்ப கொண்டாடுவார்கள். இந்த அபாஸி இல்லேன்னா டேவிட் இல்லை என்று நான் பேசும்போது கண்டிப்பா அஜித் ரசிகர்கள் எழுந்து நின்று கத்துவார்கள். நான் என்னால் முடிந்த அளவு படத்திற்கு உழைத்துள்ளேன். அஜித் ரொம்பவே ஹெல்ப் செய்தார். படம்வந்த பிறகு மத்தபடி பேசுவோம் என்று கர்ஜித்து விடை பெற்றார் புதுவில்லன் சுதன்சு.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget