கற்றது தமிழ், அங்காடித்தெரு போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற அஞ்சலி, இப்போது கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் கலகலப்பு படத்தில் அவரும், ஓவியாவும் ஆடிய கவர்ச்சி ஆட்டத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமாட்டார்கள். இந்நிலையில் இப்போது அதையும் தாண்டி ஒருபடி மேலே போய் உதட்டோடு உதடு முத்தத்திற்கு தயாராகிவிட்டார். இந்தியில் சக்கபோடு போட்ட டில்லி பெல்லி படம், தமிழில் சேட்டை என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு காட்சியில் ஆர்யாவோடு உதட்டோடு உதடு
முத்தம் வைக்க தயாராகிவிட்டார். மேலும் அது என்ன பெரிய தப்பா என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு அஞ்சலி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, படம் ரிலீஸ் ஆகும்வரை இந்த ரகசியத்தை வெளியே சொல்லாதீர்கள் என்று டைரக்டரிடம் சொல்லியிருந்தும் ரகசியத்தை வெளியே சொல்லிவிட்டார். இந்தக் கதையை டைரக்டர் எனக்கு சொல்லும்போதே ஒரு டெஸ்ட் வச்சார். படத்தில் இரண்டு சீன்கள் இருக்கு. இரண்டுமே தவிர்க்க முடியாதது. அதனால் நீங்களே எந்தக் காட்சி வேண்டும் என்று முடிவு பண்ணுங்கனு சொல்லிவிட்டார். ஒரு சீன் படுக்கையறை காட்சி, இன்னொரு சீன் உதட்டோடு உதடு வெச்சு முத்தம் தரும் காட்சி. இதுல ஒண்ணு கண்டிப்பா ஷூட் பண்ணப்போறோம்னு சொல்லிட்டார். எனக்கு பெரிய சவாலா இருந்தது. காரணம் இப்பதான் நல்ல நல்ல ரோல் நடிச்சு நல்ல பேர் வாங்கிட்டு இருக்கேன். திடீர்னு பெட்ரூம் சீன்ல நடிச்சு பெயரை கெடுத்துக்க விரும்பல. அதனால் முத்தக் காட்சிக்கு ஓ.கே. பண்ணிட்டேன. குஷி படத்துக்கு விஜய் - ஜோதிகா முத்தம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த முத்தம். அதுவும் ஆர்யா என்னோட நல்ல நண்பர், அதனால அது ஒரு பிரச்னையா தெரியல. அதோட முத்தம் கொடுக்கறது என்ன பெரிய தப்பா...? அது பாச முத்தமாக்கூட இருக்கலாம் இல்லையா...? என்று கூறியுள்ளார்.