கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்


பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்தது போல் பில்லா 2 முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. பில்லா 2-வின் வரவால் சகுனியின் வார இறுதி வசூல் படுபாதாளத்துக்கு சென்றுள்ளது.

3. சகுனி
சென்ற வார இறுதியில் சகுனி சென்னையில் 7 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இது பில்லா 2-வினால் ஏற்பட்ட பின்னடைவு. வார நாட்களில் இதே சகுனி 35 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதுவரை சென்னையில் சகுனியின் வசூல் 7 கோடிகள்.


2. நான் ஈ
இந்த தெலுங்கு டப்பிங் படம் பாக்ஸ் ஆஃபிஸில் பிக்கப்பாகியுள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 30 லட்சங்கள். இதுவரை சென்னையில் 2.1 கோடி வசூலித்து நேரடி தமிழ்ப் படங்களுக்கு இந்த ஈ கிலி உண்டாக்கியிருக்கிறது. பில்லா 2-வுக்கு ஏற்பட்ட பின்னடைவு இந்தப் படத்துக்கு இல்லை என்பதால் சான் ஈ-யின் வசூல் வேட்டை தொடரும்.


1. பில்லா 2
தானொரு ஓபனிங் கிங் என்பதை அ‌‌ஜீத் மீண்டும் நிரூபித்திருக்கிறார். பில்லா 2 முதல் மூன்று தினங்களில் சென்னையில் 2.79 கோடியை வசூலித்துள்ளது. இதுவரை ஒரு தமிழ்ப்படம் இவ்வளவு அதிகம் வசூலித்தது இல்லை. இது சகுனியின் ஓபனிங் வசூலைவிட ஏறக்குறைய ஐம்பது லட்சங்கள் அதிகம். படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாததால் வசூலும் திங்கள் முதல் படுத்துவிட்டது. எட்டு கோடியை தாண்டினால்தான் பில்லா 2 வெற்றி என்று சொல்ல முடியும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget