எனக்கு படிப்பு சரியாக வராததால் சினிமாவுக்கு வந்தேன், என்று காமெடி நடிகர் சந்தானம் கூறினார். கடலூரில் மஞ்சக்குப்பம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் யோகமும் மனித மாண்பும் என்ற அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் காமெடி நடிகர் சந்தானம் கலந்து கொண்டார். சந்தானம் வந்திருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அவரை விமரிசையாக வரவேற்றனர்.
இதனால் குஷியான சந்தானம் தனக்கே உரிய ஸ்டைலில் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், படிப்பு சரியாக வராததால் நான் சினிமாவுக்கு வந்தேன். தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது. மாறாக எல்லாம் நன்றாக நடக்கும், சந்தோஷமாக நடக்கும் என நினைக்க வேண்டும். என்ன வேலை, எவ்வளவு சம்பளம் என்பதையே சிந்தித்து கவனத்தை திசை திருப்பி வருகிறோம். இறைநிலையோடு இருந்தால் வாழ்க்கையில் கேட்பது மட்டுமின்றி கேட்காததும் கிடைக்கும், என்றார்.