பூலோகம் திரை முன்னோட்டம்!


ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் பூலோகம். இதில் நாயகனாக ஜெயம் ரவி, நாயகியாக திரிஷா நடிக்கின்றனர். பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், சண்முகராஜன், சாம்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். குத்துச்சண்டை போட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. வடசென்னையில் பாரம்பரியமாக இருக்கும் இரு குத்துச்சண்டை
குழுவினரை பற்றிய கதை. 1931-ல் கதை ஆரம்பித்து 2012-ல் நடப்பது போல் உருவாகியுள்ளது. 


ஜெயம் ரவி மூன்று மாதம் குத்துச்சண்டை பயிற்சி எடுத்து நடிக்கிறார். திரிஷா கல்லூரி மாணவியாக வருகிறார். நிஜ குத்துச்சண்டை வீரர்கள் பலர் நடிக்கின்றனர். அமெரிக்கர்கள், இருவர் வில்லன்களாக வருகின்றனர். குத்துச்சண்டை பின்னணியில் ஆக்ஷன் படமாக உருவாகிறது. நான்கு குத்துச்சண்டைகள் உள்ளன. வடபழனியில் பல ஏக்கரில் திடீர் நகர் ஏரியா அரங்கு அமைத்து அதில் குத்துச்சண்டை பயிற்சி மையம், தெருக்கள், வீடுகள், கடைகள், கோவில், மயான சுடுகாடு செட்கள் அமைத்து பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டது. ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.சதீஷ்குமார், இசை: ஸ்ரீகாந்த் தேவா, பாடல்: விஜயசாகர், எடிட்டிங்: வி.டி.விஜயன், ஸ்டன்ட்: மிராக்கில் மைக்கேல்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget