சந்தானத்தோடு சிந்து பாடும் பவர் ஸ்டார்!


ராமநாராயணன் - சந்தானம் - பவர் ஸ்டார்... கூட்டணியே களை கட்டுதில்ல... இந்தக் கூட்டணியில் வரும் படம் எப்படியிருக்கும்? ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கிடையில் ஆரம்பித்துள்ளது கண்ணா லட்டு திண்ண ஆசையா? மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தில் சந்தானமும் பவர் ஸ்டார் எனக் கிண்டலடிக்கப்பட்டு இப்போது நிஜமாகவே பவர் ஸ்டாராகிவிட்ட டாக்டர் சீனிவாசனும் நடிக்கிறார்கள்.

படத்தை தயாரிக்கப் போகிறவர்கள் இயக்குநர் ராமநாராயணனும் ஹீரோ சந்தானமும்தான். இதற்காக ஹேண்ட் பேட் ( Hand Pad ) பிலிம்ஸ் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் சந்தானம்.நகைச்சுவையையும் நட்பின் பெருமையையும் காட்சிக்கு காட்சி ஆரவாரத்தை அள்ள கூடிய வகையில் இந்தப் படம் தயாராகிறதாம்.


விவேகா பாடல்கள் எழுத, தமன் இசையமைக்கிறார். பாலசுப்பிரமணிம் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தானம் ஜோடியாக, விசாகா நாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே பிடிச்சிருக்கு படத்தில் நடித்தவர். 'பட்டிமன்ற' ராஜா, மயில்சாமி, கோவைசரளா, தேவதர்ஷினி மற்றும் பலரை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆர்யா இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. படத்தின் பூஜை இன்று ஏவிஎம்மில் நடந்தது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget