வீட்டை விட்டு ஓடிப்போய் ஆஞ்சநேயனுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகை அனன்யா என தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை அனன்யாவின் தந்தையே பரப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. 'சீடன்', 'எங்கேயும் எப்போதும்' படங்களிலும் நடித்துள்ளார். நல்ல நடிகை எனப் பெயரெடுத்த அவருக்கும், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயனுக்கும்
காதல் மலர்ந்தது.
இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் பிப்ரவரி 3-ந்தேதி திருச்சசூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன.
அப்போது ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் அனன்யா பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து நிச்சயதார்த்தத்தை அவர்கள் ரத்து செய்தனர். அனன்யாவையும் வீட்டில் சிறை வைத்தனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்ய முயற்சித்து வருவதாக ஆஞ்சநேயன் தெரிவித்தார். எற்கனவே திருமணமான விஷயம் அனன்யாவுக்கு தெரியும் என்றும் கூறினார்.
ஆனால் திருமணத்தை மறந்துவிட்டதாகக் கூறிவிட்ட அனன்யா, தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் அனன்யா தற்போது திடீரென வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் ஆஞ்சநேயனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அவருடன் குடித்தனம் நடத்துவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அனன்யாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "எனது மகள் அனன்யா வீட்டை விட்டு ஓடிவிட்டாள் என்பது உண்மைதான். அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. ஆஞ்சநேயலுவை திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. தற்போது திருவனந்தபுரத்தில் கணவருடன் வசிப்பதாக கூறுகின்றனர். அனன்யா எங்களுக்கு செய்தது பெரிய துரோகம். ஆஞ்சநேயன் அவளுக்குப் பொருத்தமானரில்லை. என் மகளுக்கு சின்ன வயது. ஆஞ்சநேயனுக்கு வயது அதிகம். இது எங்கே போய் முடியப் போகிறதோ...," என்றார்.