ரஜினியை மக்கள் மனதை கவர்ந்தவராக சித்தரிக்கும் கோச்சடையான்!


மக்கள் நெஞ்சில் தனது ஸ்டைல், தனித்த மேனரிஸம், உச்சரிப்பு மூலம் பதிந்துவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியை, காலத்தை வென்ற நாயகனாகக் காட்டும் முயற்சிதான் கோச்சடையான் படம், என்று கூறியுள்ளார் இயக்குநர் சௌந்தர்யா. லார்டு ஆப் தி ரிங்ஸ், அவதார் படங்களைத் தாண்டி, கோச்சடையான் படத்தை, அனிமேஷனின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சொல்லும் படம் என்று அறிமுகம் செய்துள்ள
சிஎன்என் தொலைக்காட்சி, அந்தப் படத்தின் இயக்குநர் சௌந்தர்யாவின் பேட்டியை சமீபத்தில் வெளியிட்டது.
இந்தப் படம் குறித்து சௌந்தர்யா கூறுகையில், "அனிமேஷன் என்றால் ஏதோ கார்ட்டூன் என்ற எண்ணத்தை கோச்சடையான் மாற்றும். அப்பாவை காலத்தை வென்ற ஒருவராக நிலைநிறுத்தும் முயற்சி இது. மேனரிசங்கள், ஸ்டைல், பேசும் முறை என அனைத்திலும் ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்ட மாபெரும் நடிகர் ஒருவரை ரியலாகக் காட்டும் முயற்சி இது. இந்தப் படத்தில் நான் வால், இறக்கைகள் கொண்ட அசாதாரண உருவங்கள் நெருப்பை உமிழும் காட்சிகளைக் காட்டவில்லை. இது ஒரு Photo realistic performance capturing film. முழுக்க முழுக்க இயல்பாக இருக்கும்.
நிஜ வாழ்க்கையில் என் தந்தை தான் கடைப்பிடிக்கும் தத்துவங்களின்படி வாழ்பவர். தான் சொன்னதைச் செய்பவர்.
ஒரு கண்டக்டராக வாழ்க்கையை ஆரம்பித்து, மொழி தெரியாத ஒரு பகுதிக்கு வந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் அவர். தான் சொல்ல நினைப்பதை வாழ்க்கை மூலம் காட்டுபவர் அப்பா.
காஸ்ட்யூம், பாடல்கள், நடனம் என பல வகையிலும் கோச்சடையான் ஒரு இந்தியப் படமாக இருக்கும்.
உலகில் என் தந்தையை நேசிக்கும் மக்கள் உள்ள நகரங்கள் அனைத்துக்கும் அவரை அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.. லண்டன், யுஎஸ், சிங்கப்பூர், மலேசியா, துபாய்... டோக்யோ ஆகிய நகரங்களுக்கு அவர் பயணம் செய்து மக்களை அவர் சந்திப்பார்," என்றார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget