ரஜினி நடிப்பில் பாலசந்தர் இயக்கிய தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்கிறார்கள் என்றபோதே சங்கிலித் தொடராக சங்கடச் செய்திகள். ரஜினி நடித்த வேடத்தில் சிவா வா? பாலசந்தரிடம் முறையான அனுமதி வாங்கவில்லை. ஒரு நல்ல படத்தை ரீமேக் பெயரில் கெடுக்கப் போகிறார்கள்... இத்யாதி.. இத்யாதி... தில்லு முல்லு படத்துக்கு நான்தான் வசனம் எழுதினேன், ஆனால் அந்தப் படத்தை ரீமேக் செய்கிறவர்கள்
எனக்குப் பணமும் தரவில்லை, முறையாக தெரிவிக்கவுமில்லை என்று குறைபட்டுக் கொண்டார் விசு. இப்படி பலரின் மனக்குமுறலுக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ரஜினி நடித்த வேடத்தில் நடிக்கயிருப்பதால் மிர்ச்சி சிவா ரஜினியை சந்தித்து அவரிடம் ஆசி வாங்கினார். ரஜினியும் ஆசிர்வதித்து ஃபோட்டோவுக்கு போஸும் தந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு மனக்குமுறல்காரர்கள் கப்சிப். ஆனானப்பட்ட ரஜினியே வாழ்த்து சொல்லும் போது நமக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கிவிட்டனர். கமலும், பாலசந்தரும்கூட இந்த ரீமேக் டீமுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்களாம்.