மாற்றான் படத்தில் இரு மாற்றான் தேசத்து மல்லிகைகள் நடித்துள்ளன. கே.வி.ஆனந்தும், மாற்றான் டீமும் இந்த மல்லிகை விவகாரத்தை இன்னும் மறைத்தே வைத்துள்ளனர்.சூர்யா, காஜல் அகர்வால்... இந்த இரு பெயர்கள் மட்டுமே மாற்றானைப் பொறுத்தவரை பிரபலம். இவர்கள் தவிர இரு ரஷ்ய அழகிகள் படத்தில் நடித்துள்ளனர். அவர்களுக்குப் படத்தில் முக்கியத்துவம் உள்ளது. இவர்கள் இருவர் பற்றிய தகவல்களையும் ரகசியமாக வைத்துள்ளார் கே.வி.ஆனந்த்.
வருகிற ஒன்பதாம் தேதி நடக்கும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இவர்கள் இருவரும் கலந்து கொள்கிறார்கள். இதில் ஒருவரின் பெயர் ஐரினா மெலிவா. இன்னொருவர் ஜுலியா பிளிஸ். மாற்றான் மீதான எதிர்பார்ப்பை இந்த இரு ரஷ்ய அழகிகள் குறித்த தகவல் மேலும் அதிகரித்துள்ளது.