ஒரு படம் தறுதலை என்பதை ரசிகர்கள் முதல்நாளே எப்படி கண்டுபிடிக்கிறார்களோ. படம் சரியில்லை என்றால் முதல்நாளே தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன. இது தமிழகத்துக்கு பொருந்துமா தெரியவில்லை. சகுனி, அட்டகத்தி போன்ற மொக்கைகள் இங்கு சக்கைப்போடு போடுகின்றன. அக்சய் குமாரின் ஜோக்கர் நேற்று வெளியானது. ஜோடி சோனாக்சி சின்கா. கடைசியாக வெளியான அக்சய், சோனாக்சி ஜோடியின் ரவுடி ரத்தோர் பம்பர் ஹிட். நூறு கோடியை அனாயாசமாகத் தாண்டியது.
அதனால் ஜோக்கருக்கு லம்ப்பாக பணம் தந்து வாங்கி வெளியிட்டனர் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும்.
சுமாருக்கும் கீழான இந்தப் படத்திற்கு முதல்நாளே கூட்டம் இல்லை. மும்பை மல்டிபிளிக்ஸில் 10 சதவீதம் பார்வையாளர்களை மட்டுமே காண முடிந்ததாம். தனி திரையரங்குகளில் மட்டும் ஓரளவுக்கு கூட்டம் காணப்பட்டது. படத்தின் ரிசல்ட் படுமோசம் என்பதால் இன்றும் நாளையும்கூட படத்தை யாரும் சீண்டப்போவதில்லை.
இந்த வருடத்தில் முன்னணி நடிகரின் படமொன்று இந்தளவு மொக்கை வாங்குவது இதுதான் முதல்முறை. அக்சய்க்கும், சோனாக்சிக்கும் இதுவொரு மறக்க முடியாத சூப்பர் ப்ளாப்.