முகமூடி படத்தை அறிவித்தபடி நேற்று வெளியிட்டது யு டிவி நிறுவனம். இவர்களின் அடுத்த வெளியீடு தாண்டவம். விக்ரம் நடித்திருக்கும் இந்தப் படத்தை விஜய் இயக்கியிருக்கிறார். அனுஷ்கா, எமி ஜாக்ஸன் ஆகியோருடன் லட்சுமிராயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். டெல்லியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு பிறகு லண்டனுக்கு மாறியது. பெரும்பாலான காட்சிகளை இங்கு படமாக்கினர்.
முக்கியமாக சந்தானத்தின் காமெடி காட்சிகள் மற்றும் ஆக்சன் காட்சிகள். இதில் விக்ரம் கண் தெரியாதவராக நடித்துள்ளார். அவருக்கு மேலும் ஒரு வேடம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
விஸ்வரூபம், மாற்றான், பரதேசி, துப்பாக்கி, சவுந்திரபாண்டியன், சாட்டை, கும்கி என அரை டஜன் படங்களுக்கு மேல் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. மாற்றான் அக்டோபர் 12 வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதற்கு முன் பெரிய படம் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை என்பதால் செப்டம்பர் 28 தாண்டவத்தை வெளியிட யு டிவி முடிவு செய்திருக்கிறது.
இவர்களின் அடுத்த தயாரிப்பான சேட்டை புது வருடத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.