வலை உலாவி புக்மார்க் கருவிப் பட்டியில் புதிய போல்டர் உருவாக்குவது எப்படி!


புக்மார்க் டூல்பாரில் தேவையானவற்றை எளிதாக பயன்படுத்தி கொள்ள புக்மார்க் செய்வது வழக்கம். இந்த புக்மார்க் டூல்பாரில் போல்டர்களையும் உருவாக்கி வைத்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு குரோம் வெப் பிரவுசரில் எப்படி புக்மார்க் டூல்பாரில் போல்டர்களை உருவாக்குவது என்று பார்க்கலாம். வலது பக்கத்தில் செட்டிங்ஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த செட்டிங்ஸ் ஆப்ஷனை ரைட் க்ளிக் செய்ய வேண்டும். இதில் புக்மார்க் என்ற ஆப்ஷன் இருக்கும். இந்த ஆப்ஷனை க்ளிக் செய்தால் புக்மார்க் மேனேஜர் என்ற ஆப்ஷனையும் பார்க்கலாம்.

புக்மார்க் மேனேஜர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் அதற்கென்று பிரத்தியேகமாக ஒரு டேப் திறக்கப்படும். இதில் புக்மார்க்ஸ் பார், அதர் புக்மார்க்பார்ஸ் போன்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் புக்மார்க்ஸ் பார் என்ற ஆப்ஷன் மேல் வைத்து மவுஸில் இருக்கும் வலது பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

இதில் ஏட் போல்டர் என்ற ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கும். இதை க்ளிக் செய்தால் போதும். புதிய போல்டர் உருவாகிவிடும். இப்படி எளிதாக புக்மார்க் டூல்பாரில் போல்டர்களை உருவாக்கலாம். 

தினம் பயன்படுத்துகின்ற வெப் பிரவுசரில் நிறைய விஷங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கும். அப்படி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சின்ன விஷயங்களையும் நமது தளத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget