வரும் 18 அன்று ஐசிசியின் டி20 உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டி இலங்கையில் தொடங்க இருக்கிறது. அந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பில் பார்க்க ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் தவமிருந்து காத்திருப்பர். அவர்களின் காத்திருப்பை உண்மையாக்கும் வகையில் ஜம்ப் கேம்ஸ் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது இந்த டி20 உலக கோப்பைக்கான அதிகாரப்பூர்வமான
மொபைல் கேம் அப்ளிகேசனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த அப்ளிகேசன் மூலம் டி20 போட்டிகளை மொபைலில் விளையாட முடியும்.
மேலும் ஜம்ப் கேம்ஸ் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஒரு போட்டியையும் நடத்துகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் 2 அதிர்ஷ்டசாலிகளுக்கு இலங்கைக்கு சென்று நேரடியாக உலக கோப்பை போட்டிகளைப் பார்க்க இலவச கூப்பன்களையும் வழங்க இருக்கிறது.
அதற்கான ஆன்லைன் போட்டிகள் வரும் செப்டம்பர் 14 முதல் 16 வரை நடைபெறும். இந்த கேம் அப்ளிகேசன் ஆன்ட்ராய்டு, ஐஒஎஸ், ப்ளாக்பெரி மற்றும் சிம்பியன் தளங்களில் இயங்கும் மொபைல்களில் மட்டுமே இயங்கும்.