ஹேய்... மச்சான் நீதானே என் பொன்வசந்தம் பாட்டு கேட்டியா? இளைஞர்கள் எங்கு சந்தித்தாலும் இப்படிதான் பேச்சைத் தொடங்குகிறார்கள். ஏற்கனவே கல்லூரி வளாகங்களில் காதலர்கள் மத்தியில் பாடல்கள் பிரபலமடைந்துவிட்டது. போட்ட சி.டி.க்கள் அத்தனையும் சேல்ஸ் ஆகிவிட்டதாக சோனி சொல்கிறது. பாடலைக் கேட்டவர்களில் பாதி பேர் தியேட்டருக்கு வந்தாலும் படம் சூப்பர்ஹிட்.செப்டம்பர் 1 வெளியிடப்பட்ட பாடல்களும், ட்ரெய்லரும் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளது. ட்ரெய்லர் பார்த்தவர்களின் எண்ணிக்கை
இதுவரை ஒன்பது லட்சத்தை தொடும். இந்த வருடத்தில் அதிகம் பேர் ஆர்வத்துடன் பார்த்த ட்ரெய்லர் என்று கூறுகிறார்கள். அதிக எண்ணிக்கையும் இதுவே.
கௌதம் இயக்கத்தில் ஜீவா, சமந்தா, சந்தானம் நடித்திருக்கும் இந்த மியூஸிகல் ரொமாண்டிக் படம் விண்ணைத்தாண்டி வருவாயாவுக்குப் பிறகு கௌதம் இயக்கத்தில் வெளிவரும் படம். எதிர்பார்ப்பு நிறைய. இளையராஜாவின் இசை மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
எப்போ படத்தை வெளியிடப் போறீங்க கௌதம்?