நான் கவர்ச்சியான நடிகையா - ரம்யா நம்பீசன்

தற்போது பீட்சா படத்தில் நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன். இதில் அவர் கவர்ச்சியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டால் இல்லவே இல்லை என்று மறுக்கிறார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: நான் கவர்ச்சிக்கு எதிரானவள் இல்லை. சினிமாவில் கவர்ச்சி ரொம்பவும் முக்கியம். ஆனால் என்னிடம் கவர்ச்சி இல்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். பீட்சா படத்தில் மார்டன் பொண்ணாக நடித்திருக்கிறேன். உடம்பை காட்டும் கவர்ச்சியில் இதுவரை எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. காரணம் என் உடல்வாகுக்கு கவர்ச்சியாக
நடிக்க முடியாது. நடித்தாலும் நன்றாக இருக்காது. குடும்ப பாங்கான நடிப்புக்கும், நடிப்புக்கு நல்ல தீனிபோடும் கேரக்டர்களுக்குதான் நான் பொருத்தமானவள். இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு வெட்கம் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் ரம்யமா நம்ம மகள் மாதிரி இல்லை, பக்கத்து வீட்டு பாமா மாதிரி இருக்காலே என்று சொல்கிற இமேஜ் போதும். கவர்ச்சிகாட்டும் உடல்வாகுள்ள நடிகைகள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பதையும் உணர்கிறேன். கவர்ச்சி வேறு மார்டனாக நடிப்பது வேறு என்பதை தெளிவாக்கி கொண்டால் நான் சொல்வது புரியும். நான் எந்தப் படத்தில் நடித்தாலும் அதை என் தாய் தந்தையுடன் சகோதர சகோதரியுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டும். இதுதான் நான் வகுத்துக் கொண்ட எல்லைக்கோடு.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget