இன்றைய கூகுள் சிறப்பு என்ன?


ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சி தொடரின் 46வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி இன்றைய கூகுள் டூடுளில் அந்த தொடரின் கதாபாத்திரங்கள் வடிவில் டூடுள் போடப்பட்டுள்ளது. ஸ்டார் ட்ரெக் என்னும் தொலைக்காட்சி தொடரை தேசிய ஒளிபரப்பு நிறுவனம்(என்.பி.சி.) 1966ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல் 1969ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி வரை ஒளிபரப்பியது. இந்த தொடர் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பிரபல அறிவியல் தொடர் ஒளிப்பரப்பட்டு 46 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதை கௌரவப்படுத்தும் விதமாக இன்றைய கூகுள் டூடுளில் ஸ்டார் ட்ரெக் கதாபாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கூகுளின் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கூகுளில் உள்ள ஜி என்ற எழுத்து ஸ்போக் கதாபாத்திரத்தையும், அடுத்து உள்ள இரண்டு ஓ எழுத்துக்கள் நியோடா உதுரா மற்றும் கேப்டன் ஜேம்ஸ் டி.கிர்க் கதாபாத்திரங்களையும் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. எல் ஹிகாரு சுலு கதாபாத்திரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து எழுத்துக்களும் ஒரு ஸ்பேஸ் ஷிப்பில் இருக்கிறது. அதில் இ என்ற எழுத்தை கிளிக் செய்தால் அருகில் உள்ள சிவப்பு நிற கதவு திறந்து வேறு ஒரு அறைக்கு செல்கிறது. அங்குள்ள பட்டனை கிளிக் செய்தால் ஓ மற்றும் இ ஆகிய எழுத்துக்கள் வேறு கிரகத்திற்கு செல்கிறது.
அங்கு வரும் கார்ன் என்ற கதாபாத்திரத்தை ஆயுதம் மூலம் சுட்டுத்தள்ளிய பிறகு இ என்ற எழுத்து மீண்டு ஸ்பேஸ் ஷிப்பிற்கே வந்துவிடுகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget