சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியின் மூலம் எல்லோரிடமும் கேள்வி கேட்டு கலாய்க்கும் இமான் அண்ணாச்சியிடம் சின்னத்திரையில் சிறந்த ஜட்ஜ் யார் என்று கேட்டதற்கு நமீதாக்கா என்று பதில் கூறியுள்ளார்.
அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் தொடங்கிய பயணம், மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி பின்னர் ஆதவன் தொலைக்காட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்று மக்களை சந்தித்து கலாய்த்து வந்தார்.
நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பினைப் பார்த்து சன் டிவியில் காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர். இதனால் ப்ரைம் டைமில் நிகழ்ச்சி செய்ய கிடைத்த சந்தோசத்தில் இருக்கிறார் இமான் அண்ணாச்சி. அவரிடம் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்வார் என்ற ஆர்வத்தில் சில எடக்கு மடக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு இமான் அண்ணாச்சி அளித்த பதில்களை படியுங்களேன்.
கேள்வி : நல்ல காதலுக்கும், கள்ளக்காதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
இமான் : நல்ல காதல்னா அவ அப்பன் அரிவாளை எடுத்துட்டு வருவான். கள்ளக்காதல்னா அவ புருஷன் அரிவாளை எடுத்துட்டு வருவான்.
கேள்வி : நயன்தாராவுக்கு பொருத்தமான ஜோடி யாரு?
பதில் : நாலைஞ்சு பேரு இருக்காங்க. அதில ஒருத்தர் இமான். எதிர்காலத்தில எது வேணும்னாலும் நடக்கலாம் இல்லையா?
கேள்வி : சின்னத்திரையில் சிறந்த ஜட்ஜ் யாரு?
பதில் : நம்ம நமீதாக்காதான். திறந்த ஜட்ஜ்னு தானே கேட்டீங்க? சிறந்த ஜட்ஜா? எதுவா இருந்தாலும் நம்ம ஓட்டு நமீதாவுக்குதான் என்று கூறிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார் அண்ணாச்சி.