சிம்புவும், சரத்குமார் மகளும் இணைந்து நடிக்கும் படம் "போடா போடி". இரண்டு வருடங்களாக தூங்கிக் கொண்டிருந்த படம் இப்போது திடீர் சுறுசுறுப்பாகிவிட்டது. படத்தின் ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல படத்தின் போட்டோக்களையும் இணையதளம் மூலம் வெளியிட்டிருக்கிறார்கள். முதலில் மீடியாக்களுக்கு சுமார் 50 படங்களுக்கு மேல் அனுப்பி வைத்தார்கள். திடீரென்று அந்தப் படங்களை பிரசுரிக்க வேண்டாம் அழித்து விடவும் இப்போது அனுப்பியுள்ள படங்களை பிரசுரிக்கவும் என்ற வேறு படங்களை அனுப்பினார்கள்.
காரணம், ஏற்கெனவே அனுப்பிய படங்களில் வரலட்சுமியின் மோசமான போஸ் படங்கள் இருந்ததாம். இதை இணைய தளத்தில் பார்த்த சரத்குமார். சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து ரெய்டு விட்டதில் முதலில் அனுப்பிய படத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு வேறு படங்களை அனுப்பினார்கள். அப்படி வாபஸ் பெறப்பட்ட படங்களில் ஒன்றைத்தான் அருகில் பார்க்கிறீர்கள்.