பத்மாமகன் இயக்கி வரும் கூத்து படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் வெளுத்துக்கட்டு அருந்ததி நிர்வாணமாக நடித்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இதுபற்றி அருந்ததியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படியொரு காட்சியில் நான் நடிக்கவே இல்லை என்கிறார். மேலும், கதைப்படி அப்படியொரு காட்சி கண்டிப்பாக வேண்டும் என்று சொன்ன டைரக்டர் எனது தோல் கலரில் ஒரு காஸ்டியூமியை அணிய
வைத்து நான் தண்ணீரில் முங்கி எழுந்திருப்பது போல் படமாக்கினார். ஆனால் இப்போது அந்த காட்சியை யூ டியூப்பில் பார்த்தால் நான் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக தண்ணீருக்குள் முங்கி எழுவது போன்றே உள்ளது. அதைப்பார்த்து நானே அதிர்ச்சியடைந்து விட்டேன். என்னை ஏமாற்றி சீட்டிங் செய்து விட்டனர் என்று கொந்தளிக்கிறார். அதோடு, இந்த காட்சியை படத்திலிருந்து எடுத்து விடுங்கள் என்று அவரிடம் கூறப்போவதாகவும் சொல்கிறார் அருந்ததி.