ஆரோகணம் - சினிமா விமர்சனம்

ஆரோகணம் - இன்னொரு நல்ல படம். இன்னைக்கு தான் "பீட்ஸா" படம் பார்த்தேன். நல்ல த்ரில்லர் படம். அதே போலொரு சஸ்பென்ஸ் வித் நேர்மறையான படம்தான் இந்த ஆரோகணம். அதற்காக பீட்சா அளவுக்கு ஓவர் திரில் & கப்ஸா இந்த படத்தில இல்ல. ரொம்ப அழகான மற்றும் நீட்டான ஆரம்ப காட்சிகள். அங்கே ஒரு விபத்து. ரெண்டு பிள்ளைகளை பெத்த தாய் விஜிதான் அந்த விபத்தில் காரில் அடிபட்டிருப்பார் என்று அடுத்தடுத்த காட்சிகளில் நமக்கு புரிந்து விடுகிறது. ஆனாலும் நமக்கு ஒரு சின்ன படபடப்பு.
அதற்க்கு காரணம், விஜியின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க பட்டிருப்பதும், தன் தாயை காணாமல் அந்த பெண் பரிதவிப்பதும், நம்மையும் கொஞ்சம் பதற வைக்கிறது.

சாட்டை படம் போல இதுவும் ஒரு நல்ல படம்தான். பை போலார் டிஸாடர் என்று மூணு படத்தில் சொன்ன அதே வியாதியைத்தான் இந்த படத்திலும் சொல்ல போகிறார்கள் என்பது எனக்கு முன்பே தெரியும். ஆனால் அந்த வியாதியை பத்தி கொஞ்சம் பாசிடிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இந்த கதையை வைத்து ஓர் ஆர்ட் பிலிம்தான் எடுக்க போகிறார் என்று நினைத்தேன். ஆனால் அந்த கதையை ஒரு விறுவிறுப்பான ஷார்ட் பிலிம் எடுக்கும் அளவுக்கு அற்புதமான திரைக்கதை. ஆனால் அதை ஒரு முழு நீள திரைப்படமாக எடுத்ததில் கொஞ்சமே கொஞ்சம் தடுமாற்றம். மற்ற படி நல்ல சஸ்பென்ஸ் மூவி.

படத்தில உள்ள கேரக்டர்ஸ பத்தி சொல்லனும்னா... விஜியின் அற்புதமான நடிப்புதான் இந்த படத்தின் மெயின். "அழகி" சீரியலில் அவர் வர்ற மாதிரியான அதே கேரக்டர்தான் இந்த படத்திலும். சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்து விஜி மகளாக வருபவரின் நடிப்பு பக்கா. அதுதான் இந்த படத்தோடு நம்மையும் பயணிக்க வைக்கிறது. விஜி மகன், கணவர், சக்களத்தி, அவளுக்கு உதவி செய்யும் மாற்று திறனாளி, பக்கத்து வீடு பாய் மற்றும் அவர் மனைவி, உமா பத்மநாபன் மற்றும் அவர் தோழி, முக்கியமற்ற ஆனால் நம்மை ஆட்கொள்ளும் கேரக்டரில் ஜெயப்ரகாஷ், மருத்துவராக சம்பத் என எல்லோரும் அந்தந்த கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

டெக்னிகலாக இந்த லோ படஜெட் படம் சிறப்பாக வந்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான். அதிலும் கேமிரா கோணங்களும், பாடல் மற்றும் விபத்து காட்சியின் எடிட்டிங்கும் அத்தனை ஷார்ப். இசை தனித்து தெரியாமல் காட்சிக்கான மூடை அழகாக உருவாக்குகிறது. சாட்டை படத்திற்கு சொன்னது போலவே, படத்தை 30 அல்லது 40 ரூபாய் கொடுத்து பார்த்தால் உணமையிலேயே ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை இந்த படம் கொடுக்கும்.

நன்றி - குவைத் சபா
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget