தமிழ் சினிமாவில் மீண்டும் முழுவீச்சில் நடிக்கப் போவதாக பேட்டி கொடுத்துள்ளார் நடிகை மீனா. ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து, பின் கிட்டத்தட்ட ரிடயர் ஆகும் தறுவாயில் திருமணம் செய்து, குழந்தை பெற்றவர் மீனா. மகள் பிறந்து 21 மாதம் ஆகிவிட்டதால், மீண்டும் மேக்கப் போடும் ஆசை வந்துவிட்டது மீனாவுக்கு. வாய்ப்பு வேண்டி, தனக்கு முன்பு நெருக்கமாக இருந்த பலருக்கும் தூதுவிட்டு வருகிறாராம். தெரிந்த நிருபர்களை அழைத்து பேட்டிகள் கொடுத்தும் வருகிறார்.
அப்படி கொடுத்த ஒரு பேட்டியில், "நடிப்பு என்பது எனக்கு பிடித்த விஷயம். அதை விட்டு என்னால் போக முடியாது. எனவே மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். சினிமா, டி.வி. என்றெல்லாம் பேதம் பார்க்காமல் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்," என்றார்.