பிரபுதேவாவுடன் திக்காக இருந்த நேரம் சினிமாவுக்கு குட்பை சொல்வதாக தெரிவித்திருந்தார் நயன்தாரா. ஸ்ரீ ராமராஜ்யம் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் நயன்தாரா கண்கலங்க, யூனிட் மலர் தூவ, கூடியிருந்தவர் தேம்பி அழ... ஒரு சென்டிமெண்ட் காட்சியுடன் நயன்தாராவின் விடைபெறல் அரங்கேறியது. அதேபோல் மூணாறில் ஒரு காட்சி. நயன்தாரா இடத்தில் சம்விருதா.
சம்விருதா காதல் செய்வீர், உயிர் போன்ற சில மலையாளப் படங்களிலும் நிறைய மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு நவம்பர் 1 ஆம் தேதி திருமணம். திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். அவரின் கடைசிநாள் ஷுட்டிங் நடந்தது மூணாறில். படம் ஆயாளும் ஞானும் தம்மில் (என்ன பொருத்தமான டைட்டில்).
சம்விருதாவின் கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் கண்ணீரும் கம்பலையுமாக ஏக சென்டிமெண்ட். விலாவரியாக பத்திரிகைகளுக்கு அந்த நாளை குறித்து பேட்டி தந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் லால் ஜோஸ். சம்விருதா நடித்த கடைசி படம் என்று கேப்சன் போட்டால் நாலு டிக்கெட் கூடுதலாக விற்கும்.
நயன்தாராவின் லவ் ட்ராஜெடியாகி மீண்டும் நடிக்க வந்தது போல் சம்விருதாவும் ரிட்டர்ன் ஆகக்கூடாது என்று, வாழ்த்துவோம்.