பாய்ஸ் படத்தில் அறிமுகமான ஜெனிலியா, அதன்பிறகு தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர், எந்த படத்திலும் அளவுக்கதிகமான கிளாமரை வெளிப்படுத்தவில்லை. அந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு கோடு போட்டு நடித்து வந்தார். இந்த நிலையில், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து வந்த ஜெனிலியா, சில மாதங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டு இல்லத்தரசியானார். என்றபோதும் ஆடிய கால்களும்,
பாடிய வாயும் சும்மாவா இருக்கும் என்பது போல், வீட்டில் ஓய்ந்திருக்க முடியாமல், மீண்டும் சினிமாக்களத்தில் குதித்திருக்கிறார் ஜெனிலியா.
வந்த வேகத்தில் அவருக்கு ஆந்திரவாலாக்கள் அமோக வரவேற்பு கொடுத்ததால், இப்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஜெனிலியா, திருமணத்துக்கு முன்பு கோடு போட்டுக்கொண்டு நின்றவர், இப்போது அதை தாண்டி விட்டார். அதாவது, கிளாமர் என்பதை கடந்து ஆபாசமாக நடித்து வருகிறார். இந்த செய்தி ஆந்திராவின் மசாலாப்பட டைரக்டர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்து விட்டது. அதனால் இளவட்ட நடிகைகளை புக் பண்ணி வைத்திருந்தவர்கள்கூட இப்போது ஜெனிலியாவின் தரிசனத்துக்காக அவர் பக்கம் சாய்ந்திருக்கிறார்களாம். அதனால் பல படங்களை கைப்பற்றி பிசி நடிகையாகிவிட்டார் அம்மணி.